Posts

Showing posts from January, 2020

ஹாய்

வணக்கம் தோழமைகளே... என்னை முன்பே தெரிந்தே... அல்லது புதிதாய் தொடர்ந்த அனைத்து வாசக நட்பின் நெஞ்சங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். சொன்னபடி விடுமுறையின் இறுதி நாளில் கதையை முடித்துவிட்டேன். மறுபடி எப்போது மேக்னா சுரேஷ் பக்கங்கள் திறக்கும் என்று சொல்ல முடியாது. அப்பா அடிக்கடி ஒரு வார்த்தை சொல்வார். சமூகத்துக்கு பயன் அளிக்காத எதையும் வாசிக்காதே எழுதாதே என்று. முடிந்த வரை கடை பிடிக்கிறேன் என்று நினைக்கிறேன். அடுத்து நம்ம பட்ஜெட்ல ஒரு நார்மல் டெலிவரி அறிவியல் கட்டுரை எழுத உள்ளேன். அதை மே மாத விடுப்பில் பிரசவிக்க எண்ணி உள்ளேன். எப்பொழுதும் போல உங்கள் ஆதரவு தொடரும் என்று நம்புகிறேன். அன்பிற்கு நன்றி.. என்றும் அன்பில்.. மேக்னா சுரேஷ்.

Mazhai - 15 (Final ud)

Image
மழை – 15  அடுத்த இரு நாட்களும் மகிழன் தன் அலைபேசியை தீண்டக் கூட முடியாமல் போனது. மாலை வேளைகளில் பதக்கம் வென்றவர்களை யாராவது உயர் அதிகாரிகள் சந்திக்க வந்து கொண்டே இருந்தார்கள்.  அதன் நிமித்தம் ஏதேனும் நிகழ்சிகள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருந்த வண்ணமே இருந்தது. காலை வேளையிலோ, இந்தியா பங்கு பெறும் மற்ற விளையாட்டு போட்டிகளில் சக வீரர்களை உற்சாகப்படுத்த அவர்களுடன் திடலில் இருக்க வேண்டி வந்தது.  இதற்கிடையில் கிடைக்கும் உணவு இடைவேளைகளில் அவன் பூங்கொடிக்கு அழைத்து பேசவே எண்ணினான். ஆனால் இவன் பதக்கம் வென்ற மறுநாள் விடியற்காலையில், அன்று நடக்க இருந்த நீச்சல் போட்டியில் பங்கு பெறும் வீராங்கனை ஒருத்திக்கு ஆலோசனை வழங்கும் படி, அவரின் பயிற்றுனர் வேண்ட நீச்சல் குளத்திற்கு சென்றிருந்தான்.  அப்பெண்ணிற்கு வளர்ச்சி குறைபாடோடு, இரு கால்களும் உள்நோக்கி வளைந்து வித்யாசமாய் இருந்தன. பிறவிக் குறைபாடாய் இருக்கும் என்று ஊகித்தவன், அப்பெண்ணை தன் முன்னே நீந்த சொன்னான்.  அதன் பிறகு, அவளின் நீச்சல் வேகத்தை மேம்படுத்த குறிப்புகள் கொடுக்க, ஜார்கண்டின் ஏதோ ஒரு குக் கிராமத்திலி...