வணக்கம் நட்புகளே.... மூணு நாளைக்கு முன்னாடி நம்ம மல்லிமா நாவல் ஒன்னு படிச்சேன். எப்போ வித்யாசமான நாவல் படிச்சாலும்... அதை பத்தி கொஞ்சம் பேசிடனும் அப்போ தான் மனசு ஓயும். ‘சந்தத்தில் பாடாத கவிதை’ – நாவல் வித்யாசம் அப்படின்னு சொல்றதை விட... டயலாக்ஸ் எல்லாம் செம ப்ராக்டிகல் மாஸ். அதுவும் ஹீரோயின் ஹீரோ அவங்க அவங்க பேரன்ட்ஸ் எதுத்து பேசுற இடத்துல... சான்சே இல்ல போங்க. எப்பவும் அப்பா இல்லாத, அம்மா வளத்த பொண்ணுங்களுக்கு.... அதுவும் தம்பிங்க இருக்க தமிழ் ஹீரோயின்ஸ் எப்பவும் பெரிய தியாக தீபங்களா இருபத்திமணி நாலு நேரமும் குடும்பத்துக்கு உழைக்கிற, கஷ்டம் புரிஞ்ச ஜீவன்களா இருப்பாங்க. நம்ம ஹீரோயின், “எனக்கு பிடிக்கல நான் வேலைக்கு போகமாட்டேன்...’’ அப்படிங்கிற இடமும், அப்பா இல்லாம வளத்தேன்னு அம்மா சொல்லும் போது எல்லாம், “சாப்பாடு போடுறதை எல்லாம் சொல்லிக்காட்டுவீங்களா..?’’ என ஹீரோயின் எகிரும் இடங்களும் பக்கா எதார்த்தம். வீட்டில் சண்டை போடும் நிகழ்வுகள் மனதில் வந்து போகுது. இந்த உலகத்தை என்னால திருத்த முடியாது எனக்கு தெரியும். ( ஹுஹும் நம்ம ஹீரோயின்ஸ்... நைட்டிய மடிச்சிகட்டிக்கிட்டு ஊரை த...