mazhai -13


மழை – 13



மகிழன் பூங்கொடி அனுப்பி இருந்த அந்த புலனச் செய்தியை எத்தனையாவது முறை வாசிக்கிறான் என்ற கணக்கில்லாமல் மீண்டும் வாசிக்க தொடங்கினான். நேற்று இரவு சரியாய் பதினொன்று ஐம்பதிற்கு அனுப்பி இருந்தாள்.

அந்த நொடி முதல், இதோ இந்த நிமிடம் வரை மீண்டும், மீண்டும் நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் அலைபேசியை கையில் எடுத்து அந்த செய்தியை வாசிக்க துவங்கிவிடுவான். இப்பொழுதும் அது போன்ற ஒரு நிமிடமே.

‘நான் சென்னை கிளம்பிட்டேன். உங்ககிட்ட நேர்ல சொல்லிட்டு, பையிங் கிஸ் கொடுத்துட்டு கிளம்பனும்னு இருந்தேன். ஆனா நேத்து சாயங்காலம் நடந்த விஷயம் எல்லாத்தையும் மாத்திடுச்சி.

உங்க பிரச்சனை என்னனா நீங்களா ஏதாவது ஒரு கம்போர்ட் சோனை செலக்ட் பண்ணிட்டு கடைசி வரை அதுல இருந்து வெளிய வர பயந்து அது தான் உங்க உலகம்னு நம்ப ஆரம்பிச்சுடுறீங்க.

நீங்க நர்சரியில இருந்து வெளிய வர மாட்டேன்னு அடம் பிடிச்ச அதே ஐஞ்சு வயசு குட்டி பையனாவே இன்னும் இருக்கீங்க. அதான் உங்க பிரச்சனை. மத்தவங்க எண்ணத்தை பிரதிபலிக்க நாம வாழக் கூடாது மாமா. நாம நமக்காக வாழனும்.

எல்லாமே இருந்து ஒன்னும் இல்லைன்னு ஏங்குற மனுசங்க மத்தியில தான், அவங்ககிட்ட எதுவுமே இல்லைனா கூட, உடல் ஊனமா இருந்தா கூட, இந்த உலகத்தை பார்க்க முடியாமா, தங்களோட உணர்வுகளை பேச்சால வெளிப்படுத்த முடியாம இருந்தா கூட அவங்க வாழ்கையை ஒரு சவாலா எடுத்து இங்க ஜெயிச்சவங்க அதிகம்.


நீங்க பெரிய நீச்சல் வீரர் தானே...நிக் பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லைன்னு நம்புறேன். பிறவியிலேயே அவருக்கு ரெண்டு காலும், கையும் இல்லை. ஆனாலும் அவர் ஒரு ஸ்விம்மர்.

வெளிய வந்தா தன்னை மத்தவங்க எப்படி பேசுவாங்க.. எப்படி பார்ப்பாங்க... அப்படின்னு அவர் வீட்டுக்குள்ள முடங்கிப் போகல. தன்னோட குறையை அவர் நிறையா மாத்த தன்னம்பிக்கையோட வாழ்கையில நின்னு போராடினார்.

இன்னைக்கு, காதல், மனைவி குழந்தைகள்னு அவரோட வாழ்க்கை ரொம்ப செழிப்பா இருக்கு. அதோட தன்னைப் போல ஊனமுற்றவங்களுக்கு தன்னால முடிஞ்ச உதவியை செய்றதோட, ஒரு தன்னம்பிக்கை பேச்சாளரா உலகம் முழுக்க சுத்தி வரார்.       

உங்களோட காலை இழந்தது மட்டும் உங்க பிரச்சனை இல்லை மாமா. நீங்க உங்க தன்னம்பிக்கையை இழந்துட்டீங்க. அதுதான் உங்களோட பெரிய பிரச்சனை.

சும்மா யானினா எப்படி இருப்பான் தெரியுமா..? எப்படி நடப்பான் தெரியுமான்னு பேசிட்டே இருக்கீங்களே. அப்ப இப்ப இருக்க நீங்க யாரு வெறும் சாணியா..?

மத்தவங்க கண்ணனுக்கு வேணா, காலை இழந்த, நீச்சல் அடிக்கிற திறமையை இழந்த யானியா நீங்க தெரியலாம். ஆனா கண்ணாடி முன்னாடி நின்னு உங்களை நீங்களே பார்த்துப்பீங்களே அப்ப நீங்க எது இருந்தாலும் இல்லைனாலும் நான் யானி தான்னு நீங்க பீல் பண்ணனும்.

நீச்சல் போட்டி ஆரம்பிகிறதுக்கு ஜஸ்ட் ஐஞ்சி நிமிஷம் முன்னாடி ஸ்டைலா சுவிங்கம் மென்னுட்டே, ரிலாக்சா... கண்ணடிப்பா இந்த போட்டியில நான் வின் பண்ணப் போறேன்னு ஒரு கான்பிடன்ஸ்சோட வந்து போர்ட் மேல நிப்பீங்களே... எப்ப அதே மாதிரி ஒரு அலட்சியத்தோட உங்களை கீழா பாக்குறவங்களை, உங்களை பரிதாபமா பாக்குறவங்களை உங்களால திருப்பி பார்க்க முடியுமோ... அப்போ நீங்க உங்க வாழ்கையை வாழ ஆரம்பிப்பீங்க.

நீங்க சொன்னது நிஜம் தான் மாமா. எனக்கு வாழ்க்கை எப்பவுமே ஒரு விளையாட்டு தான். ஆனா எப்பவும் எதுக்காகவும் யாரையும் நோகடிக்க பிடிக்காது.

நான் சொன்ன யானி எப்ப கண்ணாடி பார்க்கும் போது உங்களுக்கு தெரிவானோ அப்போ என்னை கூப்பிட வாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து காலம் முழுக்க விளையாடலாம். சில நேரம் உங்களுக்கு பிடிச்ச விளையாட்டு, சில நேரம் எனக்கு பிடிச்ச விளையாட்டு.

டோர்னமென்ட் முடிஞ்சதும், நேரா காலேஜ் ஹாஸ்டல் ஜாயின் பண்ணப் போறேன் மாமா. வீட்ல செமஸ்டர் எக்ஸாம் படிக்கணும்னு கதை விட்டு சமாளிச்சிடுவேன். என்னோட போன்சாய், மீன் தொட்டி, ஜுகுனு எல்லாரையும் நல்லா பார்த்துக்கோங்க. உங்களை நம்பி தான் விட்டுட்டு போறேன்.

அப்புறம் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்தி இருந்தா சாரி.

இப்படிக்கு...

சாணியின் பியாரி. ( பின் குறிப்பு : நீங்க எவ்ளோ அராத்தா இருந்தாலும் உங்களை தானே லவ் பண்ண தோணுது. பிறவிக் கோளாறு போல.. என்ன தான் லவ் பண்ணாலும் உங்களுக்கு கண்ணாடியில சாணி சாரி யானி தெரிஞ்சா மட்டும் தான் இஷ்க் இஷ்க்லாம் சரியா... பை.. பை.. பொண்டாட்டி இல்லைன்னு ஜனகராஜ் மாதிரி டான்ஸ் ஆடாம சூர்யா மாதிரி நான்கு கண்ணாடி சுவர்களும்னு பீல் பண்ணனும் ஓகே...) ஒரு முறைக்கிற சிரிப்பு பொம்மையோடு அந்த நெடுஞ்செய்தி முற்று பெற்றிருந்தது.

இவ்வளவு வார்த்தைகளை அலைபேசியில் தட்டச்சு செய்ய நிறைய தான் மெனக்கெட்டிருக்க வேண்டும். ஒரு பெரு மூச்சோடு எழுந்தவன் அலைபேசியை ஓரமாய் வைத்துவிட்டு, அலுவல் செல்ல தயாரானான்.
இன்னும் இரண்டு நாட்களில் பூங்கொடியின் நீச்சல் போட்டிகள் முற்று பெற்று விடும். அவளுக்கு அழைத்து பேசி சாமாதானப்படுத்துவோமா..? என்ற அவன் எண்ணத்தை ஆளுயரக் கண்ணாடியில் தெரிந்த மகிழன் தீட்சண்யமாய் மறுத்தான்.

“மீண்டும் என்னால் யானியாய் உணர முடியுமா..?” ஆளுயரக் கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பதிடம் மனத்திரையில் அவன் கேள்வி கேட்க, கிடைத்த விடை அவனுக்கு அத்தனை உவப்பானதாய் இல்லை.

நீச்சல் போட்டியில் பூங்கொடி தோல்வியை தழுவினாள் என்பதனை கூட அவளின் பயிற்றுனர் மூலமே மகிழன் அறிந்துக் கொண்டான். ஏதோ சின்ன மனப் பிணக்கு ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்ற மகிழனின் கணக்கு தப்பு கணக்காகவே போனது.

முழுதாய் இரு மாதங்கள் கடந்தும் பூங்கொடியிடமிருந்து அலைபேசி அழைப்புகள் இல்லை. ஒரே ஒரு முறை மருது பாண்டி மட்டும் வந்து, “தங்கப் பொண்ணை பார்க்க வந்தேன்.. ஏதோ பரீட்சை நடக்குதாமில்ல.. அப்படியே உங்களையும் பார்த்துட்டு போலாம்னு இந்தப் பக்கம் வந்தேன்.’’ என்றவன் ஒரு நாள் முழுக்க உடனிருந்து வீட்டை எல்லாம் ஒழுங்குபடுத்தி, மீன் தொட்டி கழுவி, போன்சாய் மரங்களுக்கு உரமிட்டு இளம் வெயில் காட்டி என்று தங்கை கட்டளையிட்டு அனுப்பியிருந்த அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டே சென்றான்.

“ஓ... மகாராணி இந்த மாசமும் வர மாட்டா போல.’’ என்று மனதிற்குள் எண்ணியவன், முகத்தினில் எதையும் பிரதிபலிக்காமல் மருதுவிற்கு விடை கொடுப்பதற்குள் சற்று சிரமப்பட்டு தான் போனான்.     

முடிவற்ற தனிமை மகிழனை வெகுவாய் கொன்றது. அவன் மடியில் ஜுகுனு வந்து அமர்ந்திருக்க, முக புத்தகத்தில் பெரிதாய் கவனமின்றி மேலும் கீழும் நகர்த்திக் கொண்டிருந்தான்.

அப்போது முகப் புத்தகத்தில் பதியப் பெற்றிருந்த ஒரு செய்தி, மகிழனின் கவனத்தை கவர்ந்தது. மீண்டும் மீண்டும் அந்த செய்தியை வாசித்துக் கொண்டே இருந்தவன், ஒரு முடிவோடு எழுந்து நின்றான்.

தன்னுடைய அறைக்குள் சென்று, தன்னுடைய நீச்சல் உடையை தேடி எடுத்தவன், யானி 001 என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்த அவ்வுடையை தன் நெஞ்சோடு சேர்த்து அழுத்தினான்.

வெற்றியோ தோல்வியோ இனி எது வந்தாலும் எதிர் கொள்வது என்ற உறுதியோடு, முகப்புத்தகத்தில் கண்ட விலாச பகுதியை தேடி சென்றான்.

கல்லூரியின் விடுதியில் உண்டுவிட்டதாய் பெயர் செய்துவிட்டு படிக்கும் தோரணையுடன், புத்தகத்தை விரித்த பூங்கொடி தன் அறையின் ஜன்னலோரம் வந்து அமர்ந்தாள்.

அவள் அருகில் வந்து நின்ற அவள் தோழி யாமினி, “இங்க இருந்து எட்டிப் பார்த்த உன் வீடு தெரியாதுடி..’’ என்று நக்கலடிக்க, நிமிர்ந்த பூங்கொடியின் விழிகளிலோ நீர்.

“லூசு ..’’ என்று கோபமாய் பூங்கொடியை கடிந்த யானிமி, “நீ உன்னையும் வருத்திகிட்டு அண்ணனையும் வருத்திகிட்டு இருக்க, இந்த செமஸ்டர் ஹாலிடேஸ்க்காவது ஒழுங்கா வீட்டுக்கு போற வழியை பாரு. எனக்கெல்லாம் இப்படி ஒரு ஆண்ட்சம் ஹீரோவை கட்டி வச்சி இருந்தாங்கன்னு..வையி இந்நேரம் ரெண்டு புள்ளை குட்டி பெத்து அதை படிக்க வைக்குற ப்ராசஸ்ல இறங்கி இருப்பேன். உன்னை மாதிரி புக்கை வச்சி வெட்டியா படிச்சிட்டு இருக்கமா..’’ என்று வம்பிழுக்க,

“ஓ... அது சரி...நாளைக்கு ஈவ்னிங் அப்பா உன்னை பார்க்க வருவார் இல்ல. உன் அத்தைப் பையன் கலிய மூர்த்திக்கு நீ ஓகே சொன்னேன்னு உன் சார்பா சொல்லிடுறேன். வக்கீல் கேஸ் கட்டுக்கு பதிலா வீட்ல தினம் உன்னை வச்சி பிரிக்கட்டும். ரெண்டு எல்லாம் உன் தகுதிக்கு கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவே கம்மி. பேசாமா நீ படத்துல எல்லாம் சொல்ற மாதிரி 16 புள்ளை பெத்து ஒரு ப்ரைமரி ஸ்கூல் ஆரம்பிச்சிடேன். பிகாஸ் இப்ப படிப்பு ரொம்ப காஸ்ட்லி யூ நோ..’’ என்று போட்டு எடுக்க, பூங்கொடியை நோக்கி கரம் குவித்தாள் யாமினி.

“அம்மா.. தாயே.. ஆளை விடு.... இதுக்கு மேல உன் பேச்சுக்கு வந்தா என்னை கேளு. எங்கப்பா நாளைக்கு கீழ வரும் போது விசிட்டர்ஸ் ஹால் பக்கம் கூட வந்துடாத செல்லம். நீ எவ்ளோ நேரம் வேணா உக்காந்து ஜன்னலை உத்து உத்து பாரு. நான் போய் தூங்குறேன்.’’ என்றவள் அங்கிருந்து நழுவி ஓட, பூங்கொடியின் இதழ்களில் பெரும் புன்னகை வந்தமர்ந்தது.   

எல்லாம் தோழி அவ்விடமிட்டு நகரும் வரை மட்டுமே. யாமினியின் தலை மறைந்ததும், பூங்கொடியின் புன்னகை அவள் இதழ்களிலேயே உறைந்தது. தூரத்தில் மங்கலாய் எரிந்து கொண்டிருந்த நியான் விளக்கினை போல உள்ளுக்குள் அவள் வைராக்கியமும் மங்கிக் கொண்டிருந்தது.

இன்றோடு சேர்த்து மகிழனிடம் பேசி மூன்று மாதம், இருபது நாள், பதினெட்டு மணி நேரம் கடந்துவிட்டது. இன்னும் இரு நாட்களில் தேர்வுகள் முடிந்து விடுமுறை துவங்க இருக்கிறது.

மருதுவிடம் ஊருக்கு வருவதாய் ஏற்கனவே சொல்லி இருந்தாள். இந்த ஒரு மாத விடுமுறை மட்டுமே, அவள் அவனுக்கும், அவளுக்கும் கொடுத்துக் கொள்ளும் கால கெடு.

அதன் பின்பும் மகிழன் தன்னை தேடி வரவில்லையெனில், அவனை தேடி தான் செல்ல வேண்டும் என்ற முடிவிற்கு கிட்ட தட்ட பூங்கொடி வந்திருந்தாள்.

மூன்று மாதங்களே முன்னூறு வருடங்களாய் தோன்ற, தன் அலைபேசியை எடுத்தவள், “நீ சாணியாவெ இருந்துட்டா என்கிட்ட இருந்து எஸ் ஆயிடலாம்னு எண்ணமா..? நோ சான்ஸ் மாம்ஸ். ஊருக்கு லீவுக்கு போய்ட்டு நேரா நம்ம வீட்டுல தான் வந்து குதிப்பேன். ஜனகராஜ் கொண்டாட்டமோ, சூரி திண்டாட்டமோ எல்லாத்தையும் சீக்கிரம் முடிச்சிக்கோ..

இப்படிக்கு சாணியோட பியாரி.’’ என்று தட்டச்சு செய்தவள், அக்குறுஞ்செய்தியை அனுப்பிய கையோடு படுக்கைக்கு சென்றுவிட்டாள்.

தன்னுடைய பயிற்சிகள் முடிந்து, இரவு நெடு நேரம் கழித்தே வீட்டிற்கு வந்த மகிழன், அலைபேசியில் பூங்கொடி அனுப்பியிருந்த செய்தி கண்டு உறச்சாகத்தில் மனதிற்குள் துள்ளினான்.

“Am now in janagaraj mood. can you please extend your home town stay. ” என்று அவளுக்கு பதில் அனுப்ப எண்ணியவன், அப்படி அனுப்பி வைத்தால் நாளைக்கே பூங்கொடி வாயில் வந்து நிற்கும் அபாயம் உள்ளது என்பதை உணர்ந்து எவ்வித குறுஞ்செய்தியும் அனுப்பாமல், தொடு திரையில் விரிந்த அவள் நிழல் படத்திற்கு அழுந்த ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, “சீக்கிரம் யானியா வந்து உன் வாயை என் வாயால அடைகிறேன்டி என் பொண்டாட்டி.’’ என மனதிற்குள் கொஞ்சிக் கொண்டான்.

சுக கற்பனைகளில் அவன் இங்குறங்க, தனிமையில் தவித்து அங்கு விழித்திருந்தாள் மகிழனின் பூங்கொடி.

மழை பொழியும்.

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Wow so finally yani going to be back,well said kodi yenna oru thoughtful & useful message,
    Meenu spelling mistake irukku konjam parunga

    ReplyDelete
    Replies
    1. பாத்துட்டேன் மா... எனக்கு பெருசா ஒன்னும் தெரியல.

      அடுத்த டைம் செக் பண்ணி போடுறேன்.

      நன்றி மா..

      Delete
  3. யானியை மீட்டு கொண்டு வர பூ எடுத்த நடவடிக்கை வெற்றி பாதையில்... சபாஷ்....

    ReplyDelete
  4. Replies
    1. Load more kodunga ma...

      Illati blogger option poi all post la poi parunga.

      Thank u.

      Delete
  5. Super super very nice super mam

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Mazhai - 15 (Final ud)

mazhai - 12

enakenap peiyum mazhai